May 13, 2021

மிட்டப்பள்ளி அருகே, சாலையில் கொட்டப்பட்ட கொரோனா மருத்துவக் கழிவுகள் பொதுமக்கள் அச்சம்…

1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா உபகரணங்கள் கழிவுகள் சாலையில் வீசப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊத்தங்கரை அடுத்துள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே ஊத்தங்கரை திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா நோய்தடுப்பு பொருட்கள் பயன்படுத்திய உபகரணங்கள், கழிவுகள், ஆகியவற்றை சாலையில் மூட்டை மூட்டையாக வீசப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது கடந்த சில தினங்களாகவே சிங்காரப்பேட்டை பகுதியில் தொற்று அதிகம் காணப்பட்டு வருகிறது, அதனால் அந்த கழிவுகள் அனைத்தும் சிங்காரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன்படுத்தியதாக தெரிகிறது. அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக சிங்காரப்பேட்டை பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *