May 13, 2021

இன்று திருவண்ணாமலையில், கிரிவலம் செல்ல தடை, மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

1 min read

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் இன்று நடைபெறும் சித்ராபௌர்ணமி கிரிவலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், காவல் துறையினர் சாலையில் தடுப்பு அமைத்து பக்தர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும், சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் 10 லட்சம் பக்தர்களும் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலையின் காரணமாக இன்று நடைபெறும் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆங்காங்கே காவல் துறையினர் தடுப்பு சுவர் அமைத்து கிரிவலம் வருவதற்கு முயற்சிக்கும் பக்தர்களுக்கு கோவிட் 19 இரண்டாம் அலையின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

கோவிட் 19 நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக ஒளிபெருக்கியின் மூலம் அறிவிப்புகளையும் செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *