May 13, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது…

1 min read

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் , சித்திரை வசந்த உற்சவம் 10ஆம் நாள். கொரோனா பரவல் காரணமாக திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்தி அருகே உள்ள ருத்ராட்ச மண்டபத்தில் பெரிய நாயகர் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரிக்கு பிறகு சுவாமி அம்பாள் ஐந்தாம் பிரகாரம் உள்சுற்று வலம் வந்தனர். அதை தொடர்ந்து இரவு மன்மத தகனம் மிக விமர்சையாக நடைபெற்றது.

மன்மதனை தகனம் செய்த அண்ணாமலையார், திருவண்ணாமலை கோயிலில் நிகழ்வு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த விழா பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை வசந்த விழா கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தினமும் காலை மாலை வேளைகளில், சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்து வந்தது.

இரவில் கோயில் மூன்றாம் பிரகாரத்தை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளான இன்று திங்கட்கிழமை, இரவு கோயில் கொடிமரம் எதிரில் நடைபெற்ற மன்மதன் தகனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அண்ணாமலையார் கலந்துகொண்டு மன்மதனைத் தகனம் செய்தார், இத்துடன் சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *