May 13, 2021

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…

1 min read

தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வண்ணம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் கலா அவர்களின் ஏற்பாட்டில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *