May 13, 2021

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உள்ளிட்ட
திமுக சார்பில், வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்…

1 min read

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணுமிடத்தில் கட்சி பணியாற்ற உள்ள முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், வழக்கறிஞர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட, வாக்கு எண்ணுமிட முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நியமனம் குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ காணொளி காட்சி மூலம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்வில், மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள், பொன்னேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் வகையில் கும்மிடிப்பூண்டியில் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பொன்னேரியில் தனியார் பள்ளியிலும் புதன்கிழமை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், சனிக்கிழமை இரவே வாக்கு எண்ணிக்கை மையம் உள்ள பகுதிக்கு வரவேண்டும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் முககவசம் அணிவதோடு, கையோடு கிருமிநாசினி கொண்டு வரவேண்டும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கதிரவன், எம்.எல்.ரவி, சுரேஷ், கோதண்டன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், பூண்டி ஒன்றிய செயலாளர் ரவி, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன், திமுக நிர்வாகிகள் இரா.அறிவழகன், பாஸ்கர்,திருமலை ஜி.பி.வெங்கடேசன், ஆறுமுகம், மணிமேகலை சுகு, ஊராட்சி தலைவர்கள் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மாதர்பாக்கம் சீனிவாசன்,அப்துல் ரஷித், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், ரமேஷ், பரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *