May 13, 2021

பள்ளிக் குழந்தைகள் மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் காவல் துறையினர்…

1 min read

தென்காசி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களின் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல் துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவர்களின் தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களால் யோகா, கலைநிகழ்ச்சிகள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.

நிகழ்ச்சியின் இறுதியாக, பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் அவர்கள் பரிசுகளை வழங்கினர். அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *