May 13, 2021

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வங்கியில் பிற்பகல் இரண்டு மணிவரை மட்டும் டோக்கன் எனும் அறிவிப்பால் கூட்ட நெரிசல், கொரோனா பயத்துடன் முதியோர்கள் காத்திருப்பு…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வங்கிகளில் 2 மணி வரை மட்டுமே டோக்கன் எனும் அறிவிப்பால் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மற்றும் வங்கி தேவைக்காக செல்வோரின் கூட்டம் அதிகமானதால் வங்கிக்கு வெளியே பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் முதியவர்கள் அமருவதற்கு இருக்கைகள் இல்லாமல் நிற்க கூட முடியாமல் கொரோனா பயத்துடன் தரையில் அமர்ந்து டோக்கன் பெற்று பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். மதியம் 2 மணி வாக்கில் 130க்கும் மேலானோர் டோக்கன் வாங்கி காத்துக் கிடந்தனர்.

பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பணம் பெற வங்கிக்கு வரும் முதியவர்களுக்கு இந்த கொரோனா நேரத்தில் முன்னுரிமை அளிக்கலாம் அல்லது அவர்களுக்கு கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் அமர்வதற்கு இருக்கைகள் குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கலாம்.

ஆனால், இந்த வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமல் வங்கிக்கு வெளியில் பல மணி நேரம் காத்திருப்பதால் அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வங்கிக்கு வருகை தந்தோர் புகார் கூறியுள்ளனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *