July 31, 2021

ஊத்தங்கரை அருகே,
காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி, வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதம்…

1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தீரன் சின்னமலை பள்ளி எதிரில் பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மீது, எதிரே வந்த ஒரு கார் மோதியது, அதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் வெகுதொலைவில் தூக்கி வீசபட்டனர். அதில், ஒருவர் சாலையின் ஓரத்திலும் மற்றொருவர் சாலையில் இருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளத்தில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்ததில், காரில் வந்தது ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பதும், பெங்களூரிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் இருந்தவர்கள் யார்? எந்த ஊர் என்பது தெரியாத நிலையில் உள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் 2 பேர் காயம் அடைந்ததில் ஒருவர் ஊத்தங்கரை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், மற்றொருவர் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து, ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்க்கு வந்த தீயனைப்பு துறையினர் தீயை அனைத்தனர். கார் மற்றும் இரு சக்கர வாகனம் இரண்டும் தீயில் எரிந்து நாசமானது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *