July 31, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில், இன்றும், நாளையும் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும், என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி கொரோனாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்பு படிப்படியாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர தொடங்கியது.

மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையால், கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு கொரோனாவின் பரவல் அதிகமாகியது. இதனையடுத்து, அரசு மருத்துவ மனைகள், தனியார் கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டதன.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய நகராட்சிகள் திருநின்றவூர், மீஞ்சூர் பேரூராட்சிகள், அயப்பாக்கம் காட்டுப்பாக்கம் மற்றும் ஈக்காடு ஊராட்சிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து, இன்று மற்றும் நாளை இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி அதில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 33 நடமாடும் வாகனங்கள் 33 மருத்துவர்கள் 31 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed