July 31, 2021

விருதுநகர் மாவட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு கிட்டங்கியுடன் கூடிய, தேர்தல் அலுவலக கட்டிடத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்…

1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கு, பாதுகாப்பு முதலீட்டு நிதியிலிருந்து, ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்தல் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு கிட்டங்கியுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த கட்டிடத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான இரா.கண்ணன் அவர்கள் இன்று (30.04.2021) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதுவரை விருதுநகர் இராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள வேளாண் விற்பனை கிட்டங்கியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தேர்தல்களில் பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் காகித தணிக்கை இயந்திரங்கள் (VVPAT) ஆகியவற்றை பாதுகாப்பாக இருப்பு வைத்திட ஏதுவாக பொதுப்பணித்துறை மூலம் ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டிட பூமி பூஜை 07.02.2020 அன்று செய்து பணிகள் துவங்கப்பட்டன.

தற்போது இந்த புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்ப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு கிட்டங்கி கட்டிடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 1493 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் பாதுகாவலர் அறை, முதல் நிலை பரிசோதனை அறை, இரண்டாம் நிலை பரிசோதனை அறை, அலுவலக அறை, பயிற்சி அறை, இயந்திரங்கள் பாதுகாப்பு கிட்டங்கி உள்ளிட்ட வசதிகளுடனும், முதல் தளத்தில் இயந்திரங்கள் பாதுகாப்பு கிட்டங்கியுனும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு கிட்டங்கிகளில் 5040 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (Ballot Unit)> 9320 வாக்குப்பதிவு கண்காணிப்பு இயந்திரங்களும் (Control Unit)> 4924 வாக்காளர் காகித தணிக்கை இயந்திரங்களும் (VVPAT) பாதுகாப்பாக வைக்கும் முடியும். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருப்பதுடன் பயன்பாட்டிற்கு விரைந்து எடுக்கவும், வைக்கவும் இயலும் என, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர், இரா.மங்களராமசுப்பிரமணியம், பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) செயற்பொறியாளர் அ.கணேசன், உதவி செயற்பொறியாளர் (கட்டடங்கள்) மு.கோபாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் (மின்) மணிவண்ணன், உதவி பொறியாளர் (கட்டடங்கள்) சுஜிதா, மற்றும் தேர்தல் வட்டாட்சியர் அய்யாக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed