May 12, 2021

திருவண்ணாமலை நகராட்சி குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்…

1 min read

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு குடிநீர் வழங்கக் கோரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

திருவண்ணாமலையில் திருமஞ்சன கோபுரம் அருகில், அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில், உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக குடிநீர் இல்லாமல் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாத நகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டி பக்தர்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை16வது வார்டு தியாகி அண்ணாமலை நகரில், தூய்மையான கழிவறை வேண்டி, நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *