July 31, 2021

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…

1 min read

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உறைந்து போயுள்ள நிலையில், பல தடுப்பு நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் அவரவர்கள் நிலைக்கேற்றவாறு பல வகைகளிலும் மக்களை தொற்றின் பிடியிலிருந்து மீட்டெடுக்க பல விதங்களில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருக்கக் கூடிய கிருஷ்ணவேணி அம்மாள் அவர்கள் ஏற்கனவே சென்றாண்டு
கொரோனா தொற்று பரவும் காலத்தில் தனது ஊராட்சி மக்களுக்கு தொற்று பரவலை தடுக்கும் விதமாக பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததுடன், மக்களுக்கு பல மருத்துவ முகாம்களும், காய்ச்சல் முகாம்களையும் நடத்தியதுடன் தொடர்ந்து கபசுர நீர் பல கட்டங்களாக வழங்கியும் வந்தார்.

அது மட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழக அரசு முழு அடைப்பு அறிவித்து இருந்ததனால், அனுப்பம்பட்டு ஊராட்சி மக்கள் வாழ்வாதாரம் இழந்து இருந்த சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக தினமும் உணவு வழங்கியும், பல கட்டங்களாக அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளும் வழங்கி உதவி வந்தார்.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், மீண்டும் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி அம்மாள், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் ஆகியோர் அனுபம்பட்டு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கபசுர நீரை தயாரித்து அதை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படுகிறது. முதல் காட்டமாக இப் பணியை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேஸ்வரன் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர் பெண்கள், மக்களுக்கு நேரிடையாக வீடு, வீடாக சென்று வினியோகம் செய்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *