June 21, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி துவங்க முன்னோட்டம், இயந்திரங்களை சோதனை செய்திட பணியாளர்கள் பணிக்கு சென்றனர்…

1 min read

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. கொரனா பாதிப்பில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக மத்திய அரசு ஆக்சிசன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு சுப்ரீம் கோர்ட்டு மூலம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் இன்னும் சில தினங்களில் ஆக்ஸிஜன் தயாரிக்க உள்ளது.

இதற்காக 24 மெகாவாட் மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதுடன் தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக 250 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதற்காக மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவானது நேற்று ஆய்வு செய்தது ஆய்வின் முடிவில் தினசரி 24 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டதுடன் தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கவும் உத்தரவிட்டது அதனைத் தொடர்ந்து வேலைக்கு ஆட்கள் தேவை என்பது குறித்து அதற்கேற்றவாறு ஷிப்டு முறையில் பணி செய்வதற்காக சுமார் 250 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கான மெஷின்கள் மற்றும் இயந்திரங்கள் சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒருசில தினங்களில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன்- 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed