June 21, 2021

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தகவல்…

1 min read

தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தினசரி போதுமான அளவு நிரப்பப்படுகிறது. வரும் காலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே தோற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
தொற்று பரவுவதை தடுப்பதற்காக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அவர் ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed