June 21, 2021

ஆவடியில், “மகளிர் இலவச பேருந்து பயணத்தை” பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்…

1 min read

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற உடன், முதல் கையெழுத்தாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

அதில், தமிழகம் முழுவதும் மகளிர்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டமும் இருந்தது. அதன்படி, “மகளிர்க்கான இலவச பேருந்து திட்டம்” இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து நிலையத்தில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அவர்கள் பெண்களுக்கு இனிப்பு வழங்கி, பேருந்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவருடன் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed