June 19, 2021

திருவண்ணாமலையில், வடிவேல் பாணியில், தொலைந்து போன 300 க்கும் மேற்பட்ட குளங்களை தேடும் பக்தர்கள்…

1 min read

நீரின்றி அமையாது உலகு என்றார் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர், திருவண்ணாமலை கோவில் நகரமாக திகழ்வதால் மன்னர்கள் காலத்தில் நீராதாரங்களை பாதுகாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் அந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ஏரி மற்றும் குளங்கள் அமைக்கும் பணி குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில், ஆண்டு முழுவதும் பக்தர்கள் தினம் ஒரு குளத்தில் நீராடி இறைவனை வழிபடும் வகையில் 364 குளங்கள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 குளங்கள் மாயமாகி விட்டதாகவும்,60 குளங்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதிலும், பல குளங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும், ஒரு சில குளங்கள் மட்டுமே நல்லநிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது. கோவில் நிர்வாகங்களில் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் வழங்கியதே இந்த அவல நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே சிறுபான்மை மக்கள் வழிபாட்டு தலங்களை தங்கள் பொறுப்பில் வைத்து இருப்பது போல் இந்து கோவில் சொத்துக்களையும், அதில் உள்ள குளங்களையும் பராமரித்து பாதுகாக்க இந்து ஆன்மீக அமைப்புகளுக்கு மட்டுமே நிர்வாக பொறுப்பை வழங்க வேண்டும்.

கோவில் வருமானத்தை கோவில் மேம்பாடு, நகர மேம்பாடு திட்டங்களுக்கு மட்டும் செலவிட உத்தரவிடவேண்டும். இனியும் கோயில் சொத்துக்கள் அரசியல்வாதிகள் பொறுப்பில் இருந்தால் மேலும் பல குளங்கள் மாயமாகி விடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே அறநிலையத்துறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கோவில் சொத்துக்கள் சுரண்டலுக்கு இடம் கொடுக்க கூடாது என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed