June 21, 2021

இபிஎஸ், ஓபிஎஸ் இல்லாமல், எதிர்க்கட்சித் தலைவராக போகும், அந்த மூன்றாவது நபர் யார்…

1 min read

அதிமுக கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் மறைவிற்குப் பின்பு பலவிதமான குழப்பங்களுக்கு இடையே ஜெயலலிதா அந்தக் கட்சியை கைப்பற்றி, திறமையுடன் நிர்வாகம் செய்து, எம்ஜிஆரை விட அதிமுகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தி, திறம்பட கட்சியை நடத்தி வந்தார். இந் நிலையில், அவருடைய மறைவுக்குப் பிறகு 2016-ம் ஆண்டில் இருந்து ஈபிஎஸ் தனது சாதுரியத்தால், சசிகலா, தினகரன் ஓபிஎஸ் என பலருடைய கைகளில் இருந்து ஆட்சியையும் கட்சியையும் தட்டிப் பறித்து மிகவும் நேர்த்தியாக, எந்த பதட்டமும் இல்லாமல், எந்தவித மிரட்டலுக்கும் அடிபணியாமல், குள்ளநரி தனத்துடன், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வரை ஆட்சியை கட்டிக் காப்பாற்றி கொண்டு வந்தார்.

பல வித போராட்டங்களுக்கு இடையே, ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டி இந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதே சமயத்தில், தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவி தன்னுடைய கையை விட்டு சென்று விட்டால், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், கட்சி தலைமையையும், தன் வசம் கொண்டு வரும் திட்டத்தை தெளிவாக தீட்டினார், எடப்பாடி.
அதற்காக, தேர்தலுக்கு முன்பே பலவித வியூகங்களை அமைத்தார். அதன்படி, ஓபிஎஸ் மற்றும் அவரை சார்ந்த தேவர் சமூகத்தினர் வெற்றி பெறுவதை தடுக்கும் விதமாக, சில காரியங்கள் செய்தார்.

அதில், முதலாவதான வியூகம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அறிவித்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், இந்த இட ஒதுக்கீட்டை யாரும் எதிர்பாராத நிலையில் கடைசி நேரத்தில் திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பின் வாயிலாக தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கக்கூடிய, சீர்மரபினர் உட்பட பல சமூகத்தினர் அதிமுக மீது வெறுப்பையும் கோபத்தையும் காட்டுவார்கள் என்பது எடப்பாடியாருக்கு தெரியும். அதன் விளைவு, அப்பகுதி அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ், உதயகுமார் உள்ளிட்ட பல மந்திரிகள் மற்றும் அச்சமுதாய வேட்பாளர்கள் பலர் தோல்வியைத் தழுவுவார்கள் என்பதும்,

அதே போல், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வன்னியர்களுடைய ஒட்டு அதிகம் இருப்பது மட்டுமில்லாமல், சென்ற 2016 சட்டமன்ற தேர்தலில், தான் வெற்றி பெற்றாலும் இரண்டாவது இடத்திற்கு வந்த பாமகா-வின் ஓட்டும் தனக்கு சேர்ந்தால், தேர்தலுக்கு முன்பே தன்னுடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்டு விடும், கிட்டத்தட்ட போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சமமாக அந்த வெற்றி இருக்கும் என்று கணித்தார். அதேபோல் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என்பதையும், கணித்து வைத்திருந்தார்.

அதேபோல், போடி தொகுதியில் போட்டியிட்ட ஒபிஎஸ்-க்கு மேலும் ஒரு தடை கல்லை உருவாக்கும் விதமாக, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பட்டியல் மாற்றம் பிரச்சினையிலும் தலையிட்டு அவர்களுக்கு உதவுவது போல் ஒரு காட்சியை வடிவமைத்தார். அதன் விளைவு, போடி தொகுதியிலுள்ள மேலும் ஒரு சில சமுதாய மக்களுடைய வெறுப்புகள் அனைத்தும் அதிமுகவின் மீது விழுந்தது. அதுவும் ஓபிஎஸ்-க்கு ஒரு தடையாக இருக்கும் என்பது எடப்பாடிக்கு தெரியும். இதையெல்லாம் கடந்து ஓபிஎஸ் வெற்றி பெறுவது சிரமம், இந்த தேர்தலில் அவர்கள் தோல்வி அடையும் பட்சத்தில், தான் எதிர்க்கட்சித் தலைவராக ஆவது உறுதி என்பதும், பின்னர் ஒரு கட்டத்தில் கட்சியையும் தான் கையகப்படுத்தலாம், என்ன திட்டம் தீட்டினார், ஈபிஎஸ்.

ஆனால், எடப்பாடியின் இந்தத் திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாக்கி, ஓபிஎஸ் தட்டுத்தடுமாறி வெற்றி அடைந்து விட்டார். அதன்பின் இப்போது எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்பதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். வெற்றி பெற்ற பல எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்- ஐ போடியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து இருக்கிறார்கள். மேலும் பல எம்எல்ஏகளுடைய ஆதரவு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டே உள்ளதும், தெளிவாக தெரிகிறது. மேலும், ஓபிஎஸ் கணக்கு தனக்கு சாதகமான சூழ்நிலையை வரவேண்டும் என்றல் சசிகலாவை கட்சியில் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்தையும் வகுத்து, அதற்கான முயற்சிகளையும் இவரும் தேர்தலுக்கு முன்பாக இருந்து செய்து கொண்டிருக்கிறார்.
அதில் ஒரு வெளிப்பாடு தான் நேற்று அதிமுக எம்எல்ஏகளுடைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று முடிவை எடுக்காதது. தற்போது வருகின்ற திங்கட்கிழமை நடக்க உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதன் முடிவு தெரியவரும். இந் நிலையில், இவர்கள் இரண்டு பேரையும் கடந்து மூன்றாவது நபராக முனுசாமி மற்றும் வேலுமணி போன்றவர்கள் சில காய் நகர்த்தல் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது, அவர்களுடைய நடவடிக்கைகளை அவர்களுடைய நிழலைகளை வைத்து கணிக்கிறது நிழல்…

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed