June 21, 2021

கும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…

1 min read

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வெங்கடாத்ரி மீது மே-5 அன்று கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்த தூண்டியதாக கூறப்படும் சூரப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அதிமுக-வை சேர்ந்த பாபுராஜ் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யாததை கண்டித்தும், பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாதர்பாக்கம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நில பிரச்சினையில் தலையிட்டதற்காக மே-5 அன்று வெங்கட்டாதிரி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது, ஈகுவார்பாளையம் அரசின் உயர்நிலைப் பள்ளி அருகில் இரவு சுமார் 10.30- மணியளவில் வெங்கடாதிரயை 4-பேர் கொண்ட மர்ம கும்பல் வழி மறித்து, “ஏன்டா ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாபுராஜா-வை தொல்லை கொடுக்கிராய்” என்று கூறி, கையில் இருந்த பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். உருட்டை கட்டையால் தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த கும்பல் கத்தியை எடுத்து வெட்ட முயன்ற போது, வயல்வெளியில் வழியாக குதித்து தப்பித்துள்ளார். உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.(கொரோனா காலம் என்பதால் மருத்துவமனையில் இடமில்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்).

இந்த கொலைவெறி தாக்குதலுக்கு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாபுராஜ் (எ) பாலசுப்பிரமணியம் என்பவர் தூண்டுதலின் பேரில் தான் கூலிப்படையை வைத்து வெங்கட்டாதிரியை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.

இதற்கு வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் முனிரத்தினம் தலைமை தாங்கினார். அதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ் தேவேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் எஸ்.மோசஸ்பிரபு, பகுதி செயலாளர் ப.லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் பி.கருணாமூர்த்தி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed