June 21, 2021

கும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…

1 min read

தமிழக அரசு நாளை முதல் (10ஆம் தேதி) முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்தும் பொதுமுடக்கம் குறித்தும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அறிவிரை வழங்கி உள்ளார். அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 130 ஊராட்சிகள் 2 பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பொதுமுடக்க காலத்தில் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக சிறுவர்கள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது, தினமும் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவர்கள் கட்டாயம் தரமான முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறே காலை 8-12 மணி வரை செயல்படும் கடைகள் கட்டாயம் சமூக இடைவெளியோடு செயல்படுவதோடு, வியாபாரிகள் கடை செயல்படும் 4 மணி நேரம் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறே கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக போராடும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீஸார், வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும், பெருந்தொற்று பரவலை தடுக்க போராடும் அனைத்து துறை அதிகாரிகளும் தன்னை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் திரளாக கரோனா தடுப்பூசி போடுவதில் தாமாக முன்வந்து ஆர்வம் காட்ட வேண்டும், கரோனா தொற்றை ஒழிக்க நம்மிடம் உள்ள இரண் டே ஆயுதம் முககவசம் மற்றும் தடுப்பூசி போடுதலே என்று அறிவுறுத்தியதோடு, பொதுமுடக்க காலத்தில் ஏழை எளியோரின் அன்றாட வாழ்வின் சிரமங்களை குறைக்கும் வகையில் திமுகவினர் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல் . இன் – 893947677

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed