June 21, 2021

தென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…

1 min read

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களின் உத்தரவுப்படி, தென்காசி மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில், செல்போன்கள் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக, தலைமைக்காவலர் கோபி அவர்கள் நியமிக்கப்பட்டு சைபர் கிரைம் உதவியோடு செல்போன்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தலைமை காவலர் கோபி அவர்கள் தீவிரமாக பணியாற்றி தொலைந்து போன, 10 செல்போன்களை துரிதமாக கண்டறிந்து மீட்கப்பட்டது.

மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து ஒப்படைத்தார். ஒரு நபருக்கு அவரின் செல்போன் மிகவும் முக்கியமானது, அதில் தான் அவரின் அணைத்து ரகசியங்கள் அவரின் தனிப்பட்ட விபரங்கள் போன்ற அணைத்தும் உள்ளது. உங்கள் செல்போன் வேறு நபரின் கையில் கிடைத்தால் அதை வைத்து அவர் உங்களின் அணைத்து ரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

எனவே செல்போன்கள் மற்றும் நமது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது .மேலும் செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களுக்கும் மற்றும் தலைமைக்காவலர் கோபி அவர்களுக்கும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed