June 19, 2021

பூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

1 min read

தமிழக முதல்வராக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த, ஐந்து திட்டத்திற்கு முதன்முதலில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றான, மகளிருக்கான இலவச பேருந்துப் பயண திட்டமும் ஒன்று ஆகும். அந்த மகளிர்க்கான இலவச பேருந்து திட்டம் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில், மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்கள் பேருந்தில் பயணம் செய்த பெண்களுக்கு இனிப்பு வழங்கி, துவக்கி வைத்தார். அப்போது அவருடன் நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed