June 19, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், நாளை அல்லது நாளை மறுநாள் பிராணவாயு கிடைக்கும் என, நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்…

1 min read

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை 5 மணி அளவில், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது; திருவள்ளூர் மாவட்டத்தில் நாள் தோறும் 1000-ல் இருந்து 1300 வரை கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாகவும், இதுவரை 2,500 பேர் மருத்துவமனைகளிலும், 1,140 பேர் தனிமைப்படுத்தபட்டும், 2164 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளதாக தெரிவித்த அவர், 17 நடமாடும் பரிசோதனை மையங்களும், 33 நடமாடும் தடுப்பூசி மையங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 250 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 142 இடங்களில் பிராணவாயு உற்பத்தி நிலையங்கள் தொடங்க உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றும் 16 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இது மட்டுமன்றி பெரம்பலூர், விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் 60 லட்சம் செலவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆவடி அரசு மருத்துவமனையில் இதுவரை பொது மருத்துவம் மட்டுமே பார்த்து வந்த நிலையில், தற்போது 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சைக்காக தொடங்கப்பட உள்ளதாகவும், பிராண வாயு உற்பத்தி தொடங்கப்பட உள்ளது என்றும், இன்னும் 10 நாட்களில் 50 படுக்கைகள் தொடங்கப்படும் எனவும், பூந்தமல்லியிலும் 100 படுக்கைகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 385 கோடியில் கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அவற்றிலும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார் திருவள்ளூரில் சித்த மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும் எனவும், திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது, என்பது தவறான செய்தி என்றும், 64.48 கிலோலிட்டர் கையிருப்பில் உள்ளதாகவும் கடந்த செப்டம்பரில் 4.8 கிலோ லிட்டராக இருந்த ஆக்சிஜன் தற்போது 64.48 கிலோ லிட்டர் தயாராக உள்ளது என்றும்,

அதேபோல, ரெம்டெசிவிர் மருந்து 936 குப்பிகள் கையிருப்பு உள்ளதாகும் தெரிவித்தார். திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் 250 நோயாளிகளுக்கான படுக்கைகளில் 212 பயன்பாட்டில் உள்ளதாகவும், 38 காலி படுக்கைகளை உள்ளதாகவும் தேவைப்படுவோர் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் நாளை அல்லது நாளை மறுநாள் கிடைக்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8949476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed