June 21, 2021

செங்கம் அருகே குடிபோதையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர், சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்து…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் குடிபோதையில், ஆண்டிபட்டி காளியம்மன் கோவில் பகுதியில், மணிக்கல் செல்லும் சாலையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது புளியம்பட்டி இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் நடந்து வந்து கொண்டு இருப்பதை கவனிக்காத, பழனி தனது மோட்டார் சைக்கிளை அந்தப் பெண் மீது திடீரென மோதினார். இதில் நிலை தடுமாறி ரோட்டில் அப்பெண் விழுந்து பலத்த காயம் அடைந்தார். பலத்த காயமடைந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed