June 17, 2021

அறந்தாங்கியில், கரோனா காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு “அறந்தை பிரண்ட்ஸ்” ரோட்டரி கிளப்பின் சார்பில், மதிய உணவு வழங்கப்பட்டது

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர்ப்புற பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டுவரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட கரோனா மிகப்பெரிய அளவில் பரவி வரும் சூழ்நிலையில் அறந்தாங்கி நகர் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 150 காவலர்களுக்கு அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சங்க பட்டயதலைவர் தங்கதுரை தலைமையில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் முன்னிலையில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் பட்டயபொருளாளர் புவனா செந்தில்குமார், வருங்கால தலைவர் சேக்சுல்த்தான், சுப்புரமணியன்,
ஆத்மாமதிவாணன், கண்ணன், விஜயசுந்தர், ராசிசெல்வம், கிருஷ்ணகுமார், சுப்பு, தியாகராஜன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *