June 21, 2021

செங்குன்றத்தில், ரெம்டெசிவர் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்த வாலிபர் கைது…

1 min read

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் திருவள்ளூர் கூட்டு சாலை சந்திப்பில் சென்னை குடிமை பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தன்ராஜ் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், இரு சக்கர வாகனத்தில் அந்த வாலிபருக்கு பயனாக முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அதில் சந்தேகமடைந்த போலீசார் வாலிபரிடம் மேலும் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த வாலிபர் கொரானோ நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக கொடுக்கப்படும், ரெம்டெசிவர் தடுப்பூசிகள் இரண்டும், நினாவர் ரெம்டெசிவர் என்ற கொரானா தடுப்பூசிகள் 6-ம் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் கரோனா நோயாளிகளுக்கு கொடுக்கின்ற உயிர் காக்கும் தடுப்பு மருந்தை கள்ள சந்தையில் 23,000 ரூபாய்க்கு அதிக விலைக்கு கொரானா நோயாளிகளுக்கு விற்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

ரெம்டெசிவர் மருந்துகளை வைத்திருந்த செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த தினேஷ் (23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த உயிர் காக்கும் தடுப்பு மருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும் இது குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed