June 17, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில், “கருவுற்ற கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளவர்கள் மருத்துவமனை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் அறிவுைரை…

1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தூத்துக்குடி துடிசியா மையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்பட்டது.

இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில்ராஜ் தலைமையில், மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் தொடங்கிவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் தான் மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.

சென்னையில் 53% கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் 8% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று அவர் கூறினார். மாவட்டத்தில் பரவலாக தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான போதுமான அளவு படுக்கைகளும், ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு ஆக்சிசன் வசதியுடன் சிகிச்சை அளிப்பதற்காக தேவையான படுக்கை வசதிகளும் போதுமான அளவு உள்ளது.

மேலும், தொற்றால் அதிகமான பாதிக்கப்பட்டால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் எனவே அந்த நிலைமை வராமல் இருக்க “அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.” என அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா அறிகுறி ஏற்பட்டு உள்ளவர்கள் அனைவரும் மருத்துவமனையில் படுக்கையில் இருந்து தான் சிகிச்கை பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. கொரோனா தோற்று லேசான அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதற்காக மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

லேசான அறிகுறியுடன் உள்ளவர்கள் அங்கு சென்று உரிய ஆலோசனைகளை பெற்று அதற்கு ஏற்ப வீட்டிலிருந்தோ அல்லது கொரோனா சிகிச்சை மையத்திலோ இருந்து தேவைக்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *