June 19, 2021

நாகர்கோயில் மாநகராட்சியில் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை…

1 min read

நாகர்கோயில் மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஆணையர் ஆஷாஅஜித் அவர்களின் உத்தரவின் பேரில், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் முன்னிலையில், நாகர்கோவில் மாநகராட்சியில் செயல்படும் தனியார் நிறுவனங்களான சோமட்டோ மற்றும் ஸ்விகி ஆகிய நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் மூலம் வீடுகளுக்குச் சென்று உணவுகளையும் பொருட்களின் வழங்கக்கூடிய பணியாளர்கள் (Delivery Boy) 80 பேருக்கு கிருஷ்ணன் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பணியாளர்கள் இடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed