June 21, 2021

சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் நிரப்புவதற்காக, கும்மிடிப்பூண்டிக்கு வந்த காலி சிலிண்டர்கள்…

1 min read

சிங்கப்பூர் நாட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஆக்சிஜன் நிரப்ப 244 காலி சிலிண்டர்கள் இன்று வந்தன.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கரொனா நோய் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆக்சிஜன் எனப்படும் செயற்கை பிராண வாய்வு பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 244 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட நிலையில் அதில் ஆக்சிஜன் நிரப்புவதற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சரக்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காமாட்சி பவர் பிளான்ட், தமிழ்நாடு ஏர் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், பாரத் ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களில் மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜன் இந்த காலி சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு விதிமுறைகளின்படி அனுப்பப்படும் பணி துவங்கியுள்ளது.

நாள் ஒன்றுக்கு எத்தனை சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது என்பதை கண்காணிக்க கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் மேற்பார்வையில் சிறப்பு வருவாய் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

செய்தியாளர் – சுடர் மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed