June 17, 2021

திருவள்ளூர் ரயில் நிலையத்திற்க்கு, ஓடிசாவில் இருந்து விரைவு ரயில் மூலம் 27.6 டன் ஆக்சிஜன் நிரப்பிய 2 லாரிகள் வந்தடைந்தன.

1 min read

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால், தமிழக அரசு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் வரவழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதனை அடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு விரைவு ரயில் மூலம், 5 லாரிகள் திரவ ஆக்சிஜன் எடுத்து வர அனுப்பப்பட்டன. இந்த நிலையில், இன்று ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 2 லாரிகள், திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தன. அவை ஒவ்வொன்றும் தலா 13.8 டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்டவை.

அவற்றில் ஒன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கும், மற்றொன்று, சென்னை விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து மதுரைக்கும் அனுப்பப்பட உள்ளன. மீண்டும் இன்று மாலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயிலில் 5 காலி லாரிகள் ரூர்கேலாவுக்கு செல்ல உள்ளன.

செய்திகள் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *