June 21, 2021

பழவேற்காட்டில், தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி-யை, ஒன்றிய குழு தலைவர் ரவி வழங்கினார்…

1 min read

தமிழகம் முழுவதும் கொரோன தொற்று பரவல் காரணமாக, தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ள நிலையில்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களுக்கு, கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணிகள் துவக்கி வைத்தார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, கோட்டைக்குப்பம் ஊராட்சிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரண நிதியினை மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி அவர்கள் நேரில் சென்று வழங்கினார். அப்போது கொரோனாவை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இந்த இரண்டாயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வீட்டிலேயே இருந்து கொரோனா சங்கிலியினை நாம் அறுத்தெறிய ஒன்றிணைய வேண்டும். பாதுகாப்பாக வீட்டிலிருந்து கொரோனாவை விரட்டுவதற்கு பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும் எனக் கூறினார்.

இந்த நிகழ்வில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் பழவை முகம்மது அலவி, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், ஒன்றிய கவுன்சிலர் எம்.கே.தமின்சா, நந்தியம் கதிரவன், கொண்டக்கரை ரமேஷ், கோட்டைக் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், திமுக நிர்வாகிகள் எஸ்.பி.குப்பம் அசோகன், தோணிரேவு கன்னிமுத்து, பழவைமைனுதீன், சாட்டாங்குப்பம் சி.எம்.ரமேஷ் அரங்கம் ஜெயபால், அம்பேத்கர் நகர் பழனி, கோட்டை தேசிங்கு, அரங்கம் கருணாகரன், சாட்டாங்குப்பம் மகேந்திரன், தோணிரேவு ஏசு ராஜன், ரமேஷ், பாலையா, புருஷோத்தமன், விஜயன், ஆரோக்கியம், மகேஷ், நூர்தீன், சரவணன், சேகுதாவூத், பாலச்சந்தர், ஜமிலாபாத் ஷேக் தாவூத், ராஜேந்திரன், கனி, மதன், நாகராஜ், ஹாஜா,பாஷா, அபுபக்கர், தேவதாஸ், தமின்சா, காங்கிரஸ் ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – பூர்ண விஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed