June 17, 2021

தென்காசி மாவட்ட காவல்துறையினர்,
கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்…

1 min read

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணசிங் அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து விளக்கி, பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவேண்டும் எனவும், மேலும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *