June 21, 2021

பழவேற்காட்டில்,
தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டி, வருவாய் துறை சார்பில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டி வருவாய் துறை சார்பில் ஆட்டோ மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தவும், கொரோனாவால் ஏற்படும் பேராபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே ஆயுதமான தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுருத்தியும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ
பிரச்சாரத்தை திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, கோட்டைக்குப்பம், ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், பழவேற்காடு ஊராட்சி செயலர் கோபால், கிராம நிர்வாக உதவியாளர் ஜடராயன், தன்னார்வலர்கள் நரேஷ், வினோத், பாபு, சாம்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ண விஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed