June 19, 2021

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு, ஒன்றரை கோடி வழங்கிய அரசன் சோப் நிறுவனத்தின் சத்தமில்லாத ஒரு நற்செயல்…

1 min read

ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு அதை பத்து ரூபாய்க்கு செலவு செய்து விளம்பரப்படுத்தும் இந்த காலகட்டத்தில் சத்தமே இல்லாமல் பெரிய தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது அரசன் சோப்பு நிறுவனம்…

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக மக்களை பாதிப்படைய செய்திருக்கும் இந்த சூழ்நிலையில், தமிழக அரசு தமிழக மக்களுக்கு மருத்துவ வசதியும் நிவாரண உதவியும் செய்து கொடுக்கப்பட வேண்டிய சூழலில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு மருத்துவ வசதியும் நிவாரணமும் வழங்க வேண்டி, தொண்டுள்ளம் கொண்ட தன்னார்வலர்களிடமிருந்து “முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு” நிதி வழங்க கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திரை நட்சத்திரங்கள் உட்பட பல நிறுவனங்களும் முதல்வருடைய கொரோனா நிவாரண நிதிக்கு, முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதி வழங்கி வருகின்றன. அதை தொலைக்காட்சி மூலமாகவும், நாளிதழ்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் செய்தியாகவும், விளம்பரமாகவும் செய்து கொண்டிருக்கும் இந்த சூழலில்,

சத்தமே இல்லாமல், தன்னுடைய நிறுவனத்தின் மூலம் முதல்வரை சந்தித்து முதல்வருடைய நேரத்தையும் வீணாக்காமல், தமிழக மக்களுக்கு உதவும் மனப்பான்மையுடன், தமிழக முதல்வருடைய நிவாரண நிதிக்கு, ஒன்றரை கோடி நிதியை வாரி வழங்கியுள்ளது, அரசன் சோப் நிறுவனம்.

சில லட்சங்கள் கொடுத்த பல திரை நட்சத்திரங்களை தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் செய்தியாக வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்த சூழலில் அமைதியாக எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல், தமிழர்களுடைய கஷ்டத்தை தீர்த்து வைப்பதில் தன்னுடைய பங்களிப்பை வழங்கிய “அரசன் சோப் நிறுவனத்தின்” உடைய செயல் தற்போது தமிழக மக்களிடையே தெரியவந்து, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தொழில் செய்யக்கூடிய, பெரிய அளவில் வருவாய் ஈட்டக்கூடிய, பல வெளிநாட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் கூட இதுவரை தமிழக முதல்வரிடம் நிதி வழங்கி தமிழர்களுடைய கஷ்டத்தில் பங்கு எடுக்காத இந்த சூழலில், “தமிழருக்காக தமிழனாகிய நாங்கள் இருக்கிறோம்” என சத்தமில்லாமல் உதவி செய்து இருக்கும் அரசன் சோப் நிறுவனத்தையும், அந்த நிறுவனத்தாருடைய குடும்பத்தாரையும், தமிழக மக்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியடைந்து பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

“மகிழ்வித்து மகிழ்வது” என்பதும், இடக்கை உதவுவது வலக்கைக்கும் தெரியக்கூடாது என்பதும் இது தானோ….

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed