June 19, 2021

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில், தூய்மை காவலர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்….

1 min read

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதனால் தமிழக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு நிவாரண உதவியாக 4000 அறிவித்துள்ளார். அதன் முதல் தவணை தற்போது தமிழகம் முழுவதும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து அவ களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், பல நலத்திட்ட பணிகளை இன்றுகாலை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று செய்தார்.

திருவிக நகர் 69-ஆவது வட்ட பகுதியில், திருவிக நகர், ஆறாவது மண்டலத்தில் பணி புரியும் தூய்மை காவலர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து, தோற்றுப் பரவல் அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் அயராது பாடுபட்டு வரும் அவர்களை பாராட்டியதுடன், அவர்களுக்கு திமுக சார்பில், தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி, இன்று பணியாளர்களுக்கு அவரே நேரடியாக உணவுகளை வழங்கினார்.

அதை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களையும் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள அவர்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள், சானிடைசர்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

அப்போது அவருடன் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர், கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திருவிக நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சட்டத் துறைச் செயலாளர் இரா கிரிராஜன்,சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தேவ ஜவகர், கொளத்தூர் பகுதி செயலாளர்கள், ஐசிஎப் வ.முரளிதரன், ஏ. நாகராசன், இளைஞரணி அமைப்பாளர் c.மகேஷ்குமார், தலைமைக் கழக வழக்கறிஞர் சந்துரு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வானவில் விஜய், மற்றும் கொளத்தூர் தொகுதி உட்பட்ட வட்டச் செயலாளர்கள், PTC.ரவி D. சந்திரசேகர், P. ஊமத்துரை, N. பொன்முடி, K. ஜார்ஜ் குமார், பா. அன்பரசு ,M. J. C. பாபு, அதிபதி, G.வாசுதேவன், S. முருகன், சௌந்தர், கோவி சண்முகம், ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – டி.எம்.கே.ஜோதி நிழல். இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed