June 19, 2021

திருவள்ளுர் மாவட்ட அரசு மருத்துவமனையில், ” நேற்று உயிரிழந்த 7 பேரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கவில்லை ” என அமைச்சர் சா.மு.நாசர் விளக்கம்…

1 min read

இன்று ஆவடி அரசுமருத்துவமனையில் புதிய கொரோனா வார்டில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் கொரோனா கவச உடையில் வந்து நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து திடீர் ஆய்வினை மேற்கொண்டனர்.

ஆவடி அரசு மருத்துவமனையில் புதியதாக 50 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் என அனைவரும் கொரோனா கவச உடையில் சென்று கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டரிந்தனர்.

மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொறுத்தும் பணிகளையும் மின் சாதனங்கள் பொருத்தும் பணிகளையும் ஆய்வு செய்து பணிகள் நிறைவடைந்து பணி செய்ய துவங்கும் தேதி குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால்வள துறை அமைச்சர் நாசர்;

ஆவடி அரசு மருத்துவமனையில் இதற்கு முன்பு 50 படுக்கைகள் கொண்ட வசதி செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, இந்த “ஆவடி மருத்துவமனையில், 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும்” என்கிற உத்தரவிட்டதன் பேரில், முதல் கட்டமாக உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது 10 படுக்கையில் ஆக்சிஜன் வசதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சென்ற வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, மேலும் “40 ஆக்சிஜன் படுகைகள் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்பணிகள் நிறைவடைந்து, வருகிற புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கும். தற்போது மின் உபகரணங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், வரும் புதன்கிழமை 50 ஆக்சிஜன் படுக்கைகள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed