June 19, 2021

கும்மிடிப்பூண்டியில், கரோனா நிவாரண நிதியை டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்..

1 min read

கும்மிடிப்பூண்டியில் 10 ஊராட்சிகளில் தமிழக அரசின் கரோனா நிவாரண உதவி தொகையை இன்று கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். கும்மிடிப்பூண்டி அடுத்த கும்புளி, ஏடூர், பல்லவாடா, பாதிரிவேடு, மாதர்பாக்கம், நேமள்ளூர், சிறுவாடா, கண்ணன்கோட்டை, பெரிய புலியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வுகளுக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதம்மா முத்துசாமி முன்னிலை வகித்தனர்.

மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன், கும்புளி, ஏடூரில் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் எம்.எல்.ரவி, ஜெயா, ஊராட்சி தலைவர் ரேவதி ஏற்பாட்டிலும், பல்லவாடாவில் மாவட்ட பிரதிநிதி முத்துசாமி ஏற்பாட்டிலும், மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் ஏற்பாட்டிலும், பாதிரிவேட்டில் ஊராட்சி தலைவர் மூர்த்தி, திமுக நிர்வாகி சந்திரமோகன், மோகன்பாபு ஏற்பாட்டிலும், நேமள்ளூரில் திமுக நிர்வாகிகள் மனோகரன், சேகர் ஏற்பாட்டிலும், கண்ணன்கோட்டையில் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் கலா உமாபதி, திமுக நிர்வாகிகள் கோபால், சுப்பிரமணி, பாபு, கருணாகரன் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

அந்த நிகழ்வுகளில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு அரசின் 2ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார்.
நிகழ்வில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கியுள்ள இந்த முதல் தவணை நிவாரண உதவியை பெறும் பொதுமக்கள் அரசின் கரோனா விதிமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்தே வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், ஏடூரில் படிக்க உதவிட வேண்டும் என கேட்ட பரத் என்கிற மாணவனுக்கு, “கல்லூரி படிப்பு வரை இலவசமாக வழங்கப்படும்” என எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதியளித்தார். இந்த நிகழ்வுகளில் கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், திமுக நிர்வாகிகள் ரமேஷ், நாகராஜ்,பரத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 893947677

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed