June 19, 2021

திருவண்ணாமலையில், “ரிமோட் கார் வாங்க சேமித்த பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவன் “…

1 min read

திருவண்ணாமலை நகராட்சி திருவுடல் தெருவில் வசித்து வரும் ஆறாம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவன் மாணிக்கவாசகம், ரிமோட் கார் வாங்குவதற்காக கடந்த 3 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை, தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு, வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று தனது மிதிவண்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஆயிரத்தி நானூறு பணத்தை வழங்கினார்.

திருவண்ணாமலையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனது சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் ரிமோட் கார் பரிசு வழங்கினார்…

திருவண்ணாமலை நகராட்சி திருவூடல் தெருவில் வசித்து வரும் பள்ளி மாணவன் மாணிக்கவாசகம், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, நேற்று, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தனது உண்டியல் சேமிப்பு பணம் ரூபாய் ஆயிரத்தி நானூறு அளித்திருந்தார். இன்று, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப்பு நந்தூரி, மாணவர் மாணிக்கவாசகம் விரும்பிய ரிமோட் கார் ஒன்றை பரிசாக அளித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி உடனிருந்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed