June 19, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில், முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா பராமரிப்பு சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் தொங்கி வைத்து பார்வையிட்டார்…

1 min read

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையின் சுற்றுலா மாளிகையில் இன்று (19.05.2021) கொரோனா பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு 100 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் 24 மணி நேரமும் தீவிர களப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்தகாக அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள சுற்றுலா மாளிகை 24 மணி நேரம் செயல்படும் கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டு இன்று 19.05.2021 முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மையத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன், 100 படுக்கைகள், உணவு, குடிநீர், உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள், திருவண்ணாமலை பேகோபுரம் பிரதான தெரு, சட்டநாயக்கன் தெரு, காஞ்சி சாலை ஆகிய இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாமில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சட்டநாயகன் தெருவில் மருந்துகள் வைக்கப்பட்டுள்ள மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கினையும் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும், திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்து சின்னக் கடை தெரு, வேங்கிக்கால் இந்திரா நகர், அறிவியல் பூங்கா அருகில் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, கொரோனா ஊரடங்கு கடைபிடிக்காமல் இரு சக்கர வாகனங்களில் காரணமின்றி சுற்றிக் கொண்டிருந்தவர்கள், ஊரடங்கு நேரம் முடிந்தும் வாகனத்தில் தக்காளி வியாபரம் செய்தவர், தேநீர் கடை நடத்தியவர் ஆகியோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்க உத்திரவிட்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed