June 21, 2021

பொன்னேரி அரசு மருத்துவமனையை, பால்வள துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்து, தலைமை மருத்துவர் அனுரத்னாவை பாராட்டினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதையும்,கொரோனா பரிசோதனை செய்வதையும் நேரில் அமைச்சர் பார்வையிட்டார்.

பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகளும் தயார் செய்யப்பட்டு உள்ளது. அவைகள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதனையும், காட்டுப்பள்ளி எல்&டி தொழிற்சாலை மூலம் அமைக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் டாங்க் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.

அப்போது பொன்னேரி அரசு மருத்துவமனையில் புதியதாக நிறுவப்பட உள்ள ஆக்சிஜன் உற்பத்தி சாதனத்தை நிறுவுவது குறித்து எல்என்டி நிறுவன அதிகாரிகளும், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுராதா அவர்களும், அமைச்சர் அவர்களிடமும், மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் விளக்கி கூறினர். மேலும், தலைமை மருத்துவர் அனுரத்னா பொன்னேரி மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவம் மற்றும் கொரோனா பிரிவு செயல்படுவது குறித்து விளக்கமாக கூறினார். இதனைக் கேட்ட, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவர் அனுரத்னாவை பாராட்டினர்.

இந்த ஆய்வின் போது அமைச்சருடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பொன்னேரி ஆர்டிஓ செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தமிழன் இளங்கோவன், பொன்னேரி பேரூராட்சி செயலாளர் டாக்டர் விஸ்வநாதன், பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூராட்சி செயலாளர் மோகன்ராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed