June 21, 2021

விருதுநகரை சேர்ந்த பள்ளி மாணவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, மாவட்ட ஆட்சியரிடம் நிதி வழங்கினர்…

1 min read

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னார்வளர்கள் மற்றும் தொண்டுள்ளம் கொண்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று விருதுநகர் மாவட்டம், ஆவுடையாபுரம், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ராஜீவ் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி பிரதீபா மற்றும் 4-ம் வகுப்பு பயிலும் மாணவன் தீபக் ஆகிய இருவரும், தாங்கள் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.2000/-த்தை வழங்கினர்.

அதேபோல், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமகுமாரி அவர்கள் ரூ.1,00,000/- க்கான காசோலையையும் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய பள்ளி மாணவியையும், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டி, மாணவிக்கு இனிப்பு வழங்கி, பார்க்கர் பேனாவை பரிசளித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்ரமணியன் கலந்து கொண்டார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed