June 21, 2021

திருத்தணி அரசு மருத்துவமனை அருகில், 150 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் தற்காலிக கொரோனா சிறப்பு வார்டு அமைக்க உள்ள இடத்தை , மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எம்.எல்.ஏ, எஸ். சந்திரன் ஆய்வு செய்தனர்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு  அதிகரித்து வருகின்றது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியில்லாததால் சிகிச்சை கிடைக்காமல் பலர் இறக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

இந் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனுக்குடன் மருத்துவ வசதி கிடைக்கும் நோக்கில், தமிழக அரசின் உத்தரவின் பெயரில், தமிழகம் முழுவதும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை அருகில், 150 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தற்காலிக கொரோனா வார்டு அமைக்கும் பணிகள் குறித்து   மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மற்றும் ‌எஸ். சந்திரன் எம்.எல்.ஏ மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகளை ஜி ஸ்க்கொயர் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில்  டெண்ட் அமைத்து  ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்து தர அந்த அமைப்பின்  நிர்வாகி பாலா உறுதி கூறினார். இது சம்பந்தமாக ஏற்கனவே அமைத்திருந்த கொரோனா வார்டுக்கான வீடியோ காட்சிகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ‌உடனடியாக பணிகள் தொடங்கி விரைவில் தற்காலிக மருத்துவமனையில் 150 படுக்கையுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், கழிப்பிட வசதியும்‌ அதில் அமைத்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, இணை இயக்குநர் டாக்டர் ராணி, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ராதிகா தேவி மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்திகள் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed