June 19, 2021

திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ அவர்கள் தலைமையில்,கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி…

1 min read

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளினை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ அவர்கள் தலைமையில், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர், அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.

எல்லாம், மக்களிடத்தும் அமைதி, சமுதாய,ஒற்றுமை நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும், நாம் உறுதி கூறுகிறோம். என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed