June 19, 2021

திருவண்ணாமலையில், மின்விளக்கு வசதியில்லாத மயானத்தால் பொதுமக்கள் அவதி…

1 min read

திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்துள்ள கிரிவல பாதையில் எமலிங்கம் அருகில் ஒரு மயானம் உள்ளது. அங்கு மின் விளக்கு வசதி இல்லாததால் இரவில் பிணத்தை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அங்கு பிணங்களை கொண்டு சென்று இறுதி சடங்கு செய்யும் பொதுமக்கள் கூறும்போது, ஓராண்டுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் பிணங்களை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் பிணங்களை புதைக்கவும் ,எரிக்கவும் முடியாமல் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. ஒரு மனிதனின் இறுதி கட்ட நிகழ்ச்சியை கூட சரியாக செய்யமுடியவில்லை என்றால் என்ன செய்வது? என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed