June 19, 2021

செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சியில், மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள, டிரான்ஸ்பார்மர் கம்பங்களை மாற்ற, மின் அதிகாரிகள் அலட்சியம்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இறையூர் அருகில் அண்ணா நகர் கிராமத்துக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை நம்பி சுமார் 50 ஏக்கர் விவசாயிகளின் நிலத்திற்கு மின் விநியோகம் செய்யப்படுகின்றது.
மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை நிறுவி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த டிரான்ஸ்பார்மர் அருகே சுற்றியுள்ள சுமார் 10 கம்பங்களும் எப்பொழுது வேண்டுமானாலும் விவசாய நிலத்தில் விளையக்கூடிய அவல நிலையில் உள்ளது. இது போன்ற அவல நிலை அப்பகுதி மக்களுக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து இந்த டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள வழியில் தினமும் ஆடு மாடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்லும் வழியாகும். எப்பொழுது வேண்டுமானாலும் விழக்கூடிய இந்த டிரான்ஸ்பார்மர் கம்பங்களை உடனடியாக மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed