June 17, 2021

வெம்பாக்கம் அருகே உள்ள மோரணம் கிராம மக்களை மரண பீதியில், வைத்து இருக்கும், ஊராட்சி நிர்வாகம், மற்றும் அதிகாரிகள்…

1 min read

வெம்பாக்கம் தாலுக்கா மோரணம் கிராமம் பொன்னி நகரில், மின் கம்பங்கள் பல பழுதடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து மின்வாரியத்திற்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை அதேபோல் ஒரே தெருவில் இரண்டு மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது. அதனால் பலமான காற்று மழை வரும் முன்பே இந்த மின்கம்பங்களை சரி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல், அதே மோரணம் காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், வெகு காலமாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இதையும் ஊராட்சி நிர்வாகம் அல்லது அதிகாரிகள் சரி செய்வார்களா? என மோரணம் பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *