June 21, 2021

திருவண்ணாமலையில், கடைகள் திறப்பு; அதிக விலைக்கு காய்கறி-மளிகை பொருட்கள் விற்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி…

1 min read

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக முழு ஊரடங்கு கடைபடிக்கப்பட்டு
வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த போதிலும் தினமும் காலை 10 மணிவரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டன. ஆனாலும் இந்த ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறையவில்லை எனவே, பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல அனுமதி வழங்க கூடாது என்று புகார் எழுந்தது.

அதனை பரிசீலனை செய்த தமிழக அரசு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வருகிற 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி இன்று காலை 6மணிமுதல் இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் திறக்கப்படும் எனவும், அப்போது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்தது.

அதன்படி திருவண்ணாமலையில் அனைத்து கடைகளும் இன்று காலை திறக்கப்பட்டன .
மாட வீதியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் பொருட்களை வாங்க திரண்டனர். காய்கறி சந்தையும் செயல்பட்டது. அங்கு பொருட்களை வாங்கச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் தங்கள் தேவைக்கு காய்கறிகளை வாங்க முடியாமல் குறைந்த அளவில் வாங்கி சென்றனர். இதே போல் மளிகை பொருட்கள் விலையும் அதிகமாக இருந்ததால் இது பற்றி மக்கள் வியாபாரிகளிடம் கேள்வி விடுத்தனர். அப்போது சரக்கு வரத்து இல்லாததால் பொருட்கள் விலை அதிகரித்து விட்டதாக வியாபாரிகள் கூறினர்.

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் பஸ்கள் இயக்கப்பட்டன. முழுஊரடங்கை முன்னிட்டு வெளியூர் செல்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கொரோனா தமிழகம் முழுவதும் அதிகளவில் பரவி வருவதால், பஸ் பயணத்தை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed