June 19, 2021

செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதிகளில், முழு ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு சென்று காய்கறி வழங்கும் திட்டத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்…

1 min read

தமிழகத்தில் ஒருவனாகவே இரண்டாவது அலை தாக்கம் அதிகளவில் உள்ளதால், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் ஒரு வாரத்திற்கு காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வேளாண்மை துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மாதவரம் பஜார் பகுதி, செங்குன்றம், சோழவரம் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் காய்கறிகளை வீடுகள்தோறும் விற்பனை செய்யும் வாகனங்களை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதில், செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்குன்றம் நகர செயலாளர் ராஜேந்திரன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெய்மதன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கார்த்திக் கோடீஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சோழவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சோழவரம் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணைத் தலைவருமான கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிழல். இன்- 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed