June 19, 2021

திருவண்ணாமலை, தளர்வுகள் இல்லாத ஊரடங்கால் வெறிச்சோடியது, பல இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அதிரடி ஆய்வு…

1 min read

தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதையொட்டி, பொதுமக்கள் நேற்றே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள காலை முதல் இரவு வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

திருவண்ணாமலையில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. மளிகை மற்றும் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இரவு 9 மணிக்கு முன்னதாகவே காய்கறிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. முகூர்த்த நாளை முன்னிட்டு ஜவுளி மற்றும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், திருவண்ணாமலை நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முக்கியச் சாலைகளில் போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களில் வெளியே வந்த ஒரு சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
இதையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நகரம் முழுவதும் ரோந்து சென்று சோதனை நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை மக்கள் அனைவரும் கடைபிடிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று போலீசாரை கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed