June 19, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில், 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி முகாம் 58 இடங்களில் நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும், போளூர் சாலையில் இராமகிருஷ்ணா மீட்டிங் ஹால் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு சிறப்பு கோவிட் 19 தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 58 இடங்களில் இன்று நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி செல்கிறார்கள்.

மாவட்டத்திற்கு இந்த சிறப்பு முகாமிற்காக தேவையான 35 ஆயிரம் கோவிட் 19 தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன.
இன்று நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் வீடுதோறும் சென்று பால், காய்கறி மற்றும் நாளிதழ் விற்பனை செய்யும் நபர்கள், கட்டிட தொழிலாளர்கள், அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள், பேருந்து, டாக்ஸி ஒட்டுநர்கள், மாற்றுத்திறனாளர்கள், மருந்துகடை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், பொதுமக்களுக்கு காய்கறிகள், போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்டத்தில் 2,000 வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகளின் மூலம் விற்பணை செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் உத்திரவின் படி, காலியாக உள்ள 60மருத்துவர்கள், 50 செவிலியர்கள் ,25 தொழில்நுட்ப ஆய்வாளர்கள், 60 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் உள்ளதாகவும் , திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கூடுதலாக 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், திருவண்ணாமலை பழைய மருத்துவ மனையில் ஆக்ஸிஜன் சேமிப்பு அலகு அமைக்கப்பட்டு அங்கேயும் ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed