June 21, 2021

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்ய, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வேண்டுகோள்…

1 min read

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர்
சா.அருணன் அவர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,
கொரோனா இரண்டாம் அலை கொடுந்தொற்று அதிக அளவில் பரவுகின்ற சூழ்நிலையில் கொடுந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிந்து உள்ளார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், அது மட்டுமின்றி, ஊரடங்கு
காலத்தில் தமிழக மக்கள் சிரமபட கூடாது என்பதற்காக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ 4000/-தில் முதல் தவணையாக ரூ 2000/- அறிவித்து வழங்கி இருப்பதும் மீதம் உள்ள ரூ.2000/- ஜூன் 3க்குள் வழங்கப்படும் என அறிவித்திருப்பது எப்போது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதை நிரூபித்து இருக்கின்றார்.

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசிற்கு உதவிடும் விதமாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்காக ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக பிடித்தம் செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டு கொள்கிறேன், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி உத்தரவு வழங்கிய மாண்புமிகு தமிழக
முதல்வர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை,முன்கள பணியாளர்களான மருத்தவர்கள் செவிலியர்கள் மருத்தவத்துறை ஊழியர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஊக்க ஊதியம் கொரோனா பணியில் இறந்த மருத்தவர்கள் குடும்பத்தினரும் காவல்துறை குடும்பத்தினருக்கும் ரூ 25 லட்சம் வழங்கி இருப்பதும் , செவிலியர்கள் தினத்தன்று 2017 ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த 1212 செவிலியர்களை பணி நிறந்தரம் செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை திணிக்க நினைக்கும் மத்திய அரசிற்கு கடும் எதிர்ப்பு தெரிக்கும் அரசின் முடிவு மிகவும் வரவேற்க தக்கது , பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு கட்டாயம் மாணவர்களுக்கு கொரோனா தாக்கம் குறைந்த பின்பு பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்றும் , மற்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்ற வலியுறுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது போற்றுதலுக்கு உரியது.

அதே போன்று துறை சார்ந்த பணி மாறுதல்களில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தவிட்டருப்பது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறு உருவம் என்பதை நிருத்துள்ளார், தமிழக முதல்வர் அவர்கள் நல்லாட்சி தருவார் என்பதற்கான முன்னோட்டம் என்பதில் ஐயமில்லை, என அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8938476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed